Fribourg மாகாணத்தில் Bossonnens இல் நேற்று அதிகாலை ஏற்பட்ட விபத்தை அடுத்து கார் தீப்பற்றி எரிந்தது.
21 வயதுடைய இளைஞன் உறங்கிப் போய் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால், தோட்டம் ஒன்றுக்குள் நுழைந்தது. அப்போது கார் தீப்பிடித்தது.
இதனால் அருகில் இருந்த வீட்டிலும் தீ்ப்பிடித்தது.
தீயணைப்பு பிரிவினர் விரைந்து செயற்பட்டதால் வீடு அதிக சேதங்களில் இருந்து தப்பியது.
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
மூலம் -20min.