Ermatingen இல் 66 வயதுடைய பெண் ஒருவர் செலுத்திய கார் கட்டுமான வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர், அவர்களில் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இரண்டு கட்டுமானத் தொழிலாளர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் ஒருவர் சிறிய காயம் அடைந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.