20.6 C
New York
Friday, August 14, 2026

பெண் சடலமாக மீட்பு- இளைஞன் கைது.

சூரிச் நகரில் மாவட்டம் 6 இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவரின் சடலத்தை பொலிசார்  சனிக்கிழமை மாலை கண்டுபிடித்தனர்.

38 வயதுடைய டொமினிக்கன் பெண்ணே உயிரிழந்திருப்பதாகவும் அவர் மீது வன்முறை இடம்பெற்றிருப்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சூரிச் கன்டோனல் பொலிசார், குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரை நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

மாவட்டம் 4இல் கைது செய்யப்பட்ட அந்த சந்தேக நபர் 23 வயதுடையவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலம்- Zueritoday

Related Articles

Latest Articles