சூரிச் விமான நிலையத்தில் சுமார் 50 கிலோ கஞ்சாவுடன் நேற்று மாலை ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கான மத்திய அலுவலகம் மற்றும் சூரிச் கன்டோனல் பொலிசார் இணைந்து நடத்திய சோதனையில், சுமார் 50 கிலோ கஞ்சா இருந்த சூட்கேஸை கண்டுபிடித்து கைப்பற்றினர்.
அந்த சூட்கேஸ் 18 வயது ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது.
அவர் பாங்கொக்கில் இருந்து ஸ்பெயின் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
சூரிச் கன்டோனல் பொலிசார் அந்த இளைஞனை சூரிச்சில் புறப்படும் வாயிலில் பிடித்து சட்டமா அதிபர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.