Albisriederplatz இல் உள்ள Badenerstrasse இல் கார் மீது ட்ராம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
2 ஆவது பாதையில் சென்ற கொண்டிருந்த ட்ராம் வண்டியே கார் மீது மோதியுள்ளது.
நேற்றிரவு 9.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.
இதில் ஒருவர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கார் சேதமடைந்த நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மூலம்- zueritoday.

