Zug நகரில் திங்கள் இரவுக்கும் செவ்வாய் அதிகாலைக்கும் இடையில் இரண்டு கார்கள் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ளன.
Zug நகரில் Bundesplatz இல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திங்கட்கிழமை இரவு 11.45 மணியளவில் தீப்பிடித்து எரிந்தது.
தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்த போதும் கார் முற்றாக எரிந்து நாசமாகியது.
அதன் அருகே நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரும் சேதம் அடைந்தது.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்தில், Gotthardstrasse இல் மற்றொரு கார் தீப்பிடித்து எரிவதாக செவ்வாய் அதிகாலை 2.15 மணியளவில் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்படுத்திய போதும் கார் முற்றாக எரிந்து நாசமாகியது.
இந்த இரண்டு தீவிபத்து சம்பவங்களுக்குமான காரணம் தெரியவராத நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மூலம் – Zueritoday

