Solothurn கன்டோனில் Hägendorf இல் தனக்குத் தானே தீவைத்துக் கொண்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வீதியில் எரியக்கூடிய திரவம் ஒன்றை ஊற்றி தனக்குத் தானே தீவைத்துக் கொண்டார்.
கடந்த செப்ரெம்பர் 11ஆம் திகதி நடந்த இந்தச் சம்பவத்தில், படுகாயம் அடைந்தவர் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவர், சிகிச்சை பலனின்றி கடந்த 25ஆம் திகதி உயிரிழந்தார் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம் – Zueritoday

