15.7 C
New York
Sunday, September 27, 2026

பாடசாலைக்குள் பெப்பர் ஸ்பிரே – மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

 Pfungen இல் உள்ள Seebel  பாடசாலையில் சிறுவர்களுக்கான இரண்டு கழிவறைகளில் பெப்பர் ஸ்பிரே தெளிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்கப்படுவதாக சூரிச் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக பாடசாலையில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

- Advertisement -

அது பெப்பர் ஸ்பிரே தான் என்றும், கண்ணீர்ப்புகை அல்ல என்றும் பாடசாலைத் தலைவர் தெரிவித்தார்.

சிறுவர்களின் இரண்டு கழிவறைகளில் கடுமையான இருமலை ஏற்படுத்திய ஒரு பொருளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்டுபிடித்தனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக, பாடசாலைக் கட்டடத்தில் இருந்து காலை 11:15 மணியளவில் மாணவர்கள் வெளியேற்றப்பட்டதுடன் பொலிசார் வரவழைக்கப்பட்டனர்.

காலை 11:45 மணியளவில், மாணவர்கள் தங்கள் வகுப்பறைகளுக்குத் திரும்ப முடிந்தது. மதியத்திற்குப் பின்னர் வகுப்புகள் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

இந்தச் சம்பவத்துடன் 3 மாணவர்கள் தொடர்புபட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles