Montagny-près-Yverdon இல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செவ்வாய் மாலை 4.45 மணியளவில், Yverdon-les-Bains இற்கும் Sainte-Croix இற்கும் இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
62 வயதுடைய சுவிஸ் நாட்டவர் ஒருவரே விபத்தில் உயிரிழந்தார்.
அவர் செலுத்திச் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து தடுப்புகளை உடைத்துக் கொண்டு விநியோக வாகனம் ஒன்றின் மீது மோதியது.
மோதிய வேகத்தில் அந்த நபர் காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு மரணமானார்.
விநியோக வாகனத்தில் இருந்த இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர்.
மூலம் -Bluewin