16.9 C
New York
Thursday, September 11, 2025

உணர்வுபூர்வமாக அமைந்த மாவீரர் நாள்.

மாவீரர் நாள் நேற்று தமிழர் தாயகப் பகுதிகளில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றுள்ளது.

கடும் மழை, புயலுக்கு மத்தியில் வடக்கு கிழக்கில் உள்ள அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்கள் மற்றும் நினைவிடங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினார்கள்.

மாலை 6.05 மணியளவில் நினைவொலி எழுப்பப்பட்டதை அடுத்து, அவணக்கம் இடம்பெற்றது. அதையடுத்து மாவீரர்கள் நினைவாக பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

சம நேரத்தில் பெற்றோர் உரித்துடையோர் பொதுமக்கள் மாவீரர்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

கொட்டும் மழைக்கும், வெள்ளத்திற்கும் மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களில் உணர்வுப் பெருக்குடன்  மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தனர்.

Related Articles

Latest Articles