-0.5 C
New York
Tuesday, December 30, 2025

வீட்டில் காயங்களுடன் இருவர் மீட்பு

St. Gallen  கன்டோனில் உள்ள Grünaustrasse  இல் நேற்று நடந்த சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நேற்று மாலை 6.35 மணியளவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த பெண் ஒருவர் பொலிசாரிடம் அவசர உதவி கோரியுள்ளார்.

இதையடுத்து  சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார், காயங்களுடன் இருந்த சுவிஸ் பிரஜைகளான ஆண் மற்றும் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் வேறு நபர்கள் தொடர்புபட்டதாக தெரியவில்லை என்றும்  கூறப்படுகிறது.

இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வது வழக்கம் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலம் – 20min

Related Articles

Latest Articles