23.2 C
New York
Thursday, October 8, 2026

சடுதியாக பிரேக் போட்ட பஸ்- 2 பயணிகள் காயம்.

St. Gallen நகரில் பஸ் ஒன்று சடுதியாக பிரேக் போடப்பட்டு நிறுத்தப்பட்டதால், இரண்டு பயணிகள் காயம் அடைந்தனர்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

- Advertisement -

சிவப்பு விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்த போது பாதசாரி ஒருவர், வீதியைக் கடக்க முயன்றதால், பஸ் சாரதி சடுதியாக பிரேக் போட்டு நிறுத்தினார்.

இதனால்,  இரண்டு பெண் பயணிகள், நிலை தடுமாறி விழுந்து காயம் அடைந்தனர்.

அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூலம்- 20min.ch

Related Articles

Latest Articles