28.6 C
New York
Thursday, August 20, 2026

தீப்பற்றி எரிந்த விநியோக வான்.

Münchenstein  இல் உள்ள Bruderholzstrasse இல் ஒரு விநியோக வான்  தீப்பிடித்து  எரிந்து நாசமாகியது.

சனிக்கிழமைமதியம் 12.30 மணிக்கு சற்று முன்னதாக இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

ஓடிக் கொண்டிருந்த வான் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியதும், அதன் சாரதியான 56 வயதுடைய நபர் உடனடியாக வெளியேறினார்.

தீயணைப்பு பிரிவினர் வந்து சேர்வதற்கிடையில் வாகனம் முழுமையாக எரிய தொடங்கியிருந்தது.

15 நிமிடங்களில் அவர்கள் தீயை முற்றாக அணைத்தனர்.

இதனால் 2 மணிநேரம், அந்த வீதி ஊடான போக்குவரத்து  தடைப்பட்டது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles