பயணப் பொதிகள் காணாமல் போவது, மற்றும் விமானங்கள் தாமதம் போன்றவற்றுக்கு சூரிச் விமான நிலையம் மற்றும் Skyguide உம் பொறுப்புக்கூற வேண்டும் என Swiss விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயணப் பொதிகள் காணாமல் போவது, மற்றும் விமானங்கள் தாமதம் போன்றவற்றுக்கு தங்களின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் நியாயமில்லை என்று, Swiss விமான நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளர் Oliver Buchhofer தெரிவித்துள்ளார்.
இதனுடன் தொடர்புடைய சூரிச் விமான நிலையம் மற்றும் Skyguide போன்றவற்றுக்கும் இதில் பொறுப்பு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுவிஸ் விமானம் தாமதமானால், ஒரு சூட்கேஸ் தொலைந்தால், Swiss விமான நிறுவனமும் விமர்சிக்கப்படுகிறது.
அதற்கு இழப்பீடும் வழங்க வேண்டும். ஆனால், எல்லா குற்றங்களும் விமான நிறுவனத்தில் இல்லை.
விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு போன்ற ஏனைய தரப்புகளும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மூலம்- 20min