11.4 C
New York
Tuesday, October 6, 2026

Lindor சொக்லட் உரிமை வழக்கில் வென்றது Lindt & Sprüngli நிறுவனம்.

Lindor சொக்லட் உருண்டைகளின் வர்த்தக முத்திரை உரிமை தொடர்பான வழக்கில்,  Lindt & Sprüngli, நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.

வர்த்தக உரிமையை  மீறியதாக சில்லறை விற்பனையாளரான Aldi Suisse மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

- Advertisement -

வழக்கின் தீர்ப்பை அடுத்து, Aldi Suisse தனது சொந்த சொக்லட் உருண்டைகளின் விற்பனையை நிறுத்த வேண்டும்.

German discounterஇன்  சுவிஸ் கிளையான Aldi Suisse  நிறுவனத்தினால் விற்கப்படும் ” Moser Roth ” சொக்லட்  உருண்டைகள் தமது,  Lindor சொக்லட் உருண்டைகளுடன், தேவையில்லாமல் ஒத்திருப்பதாக, Lindt & Sprüngli யின் வாதத்தை Aargau  வர்த்தக நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் ஆண்டுக்கு 44.8 மில்லியன் பிராங் Lindor உருண்டைகள்,  விற்பனையாகின்றன.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles