சூரிச்சில் உள்ள Schärenmoosstrasse இல் பெண்ணால் தாக்கப்பட்ட மற்றொரு பெண் காயம் அடைந்துள்ளார்.
23 வயதுடைய உக்ரைன் பெண் ஒருவரே முகத்தில் தாக்கப்பட்டதுடன், கூரிய ஆயுதத்தினால் தாக்கி காயப்படுத்தப்பட்டுள்ளார்.
- Advertisement -

அவரைத் தாக்கியவர், 36 வயதுடைய உக்ரைன் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இரண்டு பேருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த சம்பவத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.
ஏன் இருவரும் மோதிக் கொண்டனர் என பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
மூலம்- 20min.


