-0.3 C
New York
Thursday, February 12, 2026

2024ல் கார் விற்பனை வீழ்ச்சி.

2024ல்  சுவிட்சர்லாந்தில் புதிய கார்கள் விற்பனை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைன் மாகாணத்தில் 2,39,500 புதிய கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் ஓட்டோமொபைல் இறக்குமதியாளர்கள் சங்கம் நேற்று அறிவித்துள்ளது.

இது முந்தைய ஆண்டை விட 5% குறைவாகும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முன்னர், புதிய கார்களின் பதிவுகளின் எண்ணிக்கை சுமார் 300,000 ஆக இருந்தது.

முழு மற்றும் இலேசான கலப்பின கார்களின் விற்பனை  17% அதிகரித்துள்ளது.

அதேவேளை, மின்சார கார்கள் (-12.5%) மற்றும் பிளக்-இன் கலப்பினங்கள் ( -10.4%) போன்றவற்றின் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles