17.5 C
New York
Wednesday, September 10, 2025

ஏழு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை.

ஏழு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த 50 வயது நபர் ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் பல சிறுவர்களை பல ஆண்டுகளாக துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

அந்தச் சிறுமிகளில் பலரை வைத்து அவர் வீடியோ எடுத்துள்ளார்.

அவர்களில் 6 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட 7 சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், செவ்வாய்க்கிழமை Wil  நீதிமன்றத்தில் அவர் முன்னிலையாகியிருந்தார்.

அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு 89 ஆயிரம்  பிராங் இழப்பீட்டையும், வழக்குச் செலவுகளையும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles