ஈஸ்டர் திங்கட்கிழமை காலமான போப் பிரான்சிஸுக்கு, சுவிஸ் ஜனாதிபதி கரின் கெல்லர்-சுட்டர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில்,
அவர் ஒரு சிறந்த ஆன்மீகத் தலைவராகவும், அமைதிக்காக அயராது வாதிடும் ஒருவராகவும் இருந்தார்.
மேலும் அவரது மனித அரவணைப்பு கத்தோலிக்கர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் ஆறுதலாக இருந்தது.
போப் பிரான்சிஸ் நம்மை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அவரது மரபு நிலைத்திருக்கும் என்று கரின் கெல்லர்-சுட்டர் தெரிவித்துள்ளார்.
மூலம்- swissinfo