Zurich இல் உள்ள Bassersdorf இல், நேற்று மாலை 6.15 மணியளவில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பரவிய தீவிபத்தினால் பெருமளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
முதலில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் பல்கனியில் தீப்பற்றிய நிலையில் அது விரைவாக 2அவது 3ஆவது மாடிகளுக்கும் பரவியது.
- Advertisement -

அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த தீவிபத்தினால் 3 அடுக்குமாடிக் குடியிருப்புகளும் பலத்த சேதம் அடைந்துள்ளன.
தீயணைப்பு பிரிவினர் கடுமையாக போராடி தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
மூலம்- 20min


