பெர்ன் கன்டோனில் உள்ள வோர்ப் அருகே உள்ள விஸ்லன் சுரங்கப்பாதையில், இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
நேற்றுப் பிற்பகல் 1:40 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், பெர்ன் கன்டோனைச் சேர்ந்த 40 வயதுடைய சுவிஸ் நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மேலும் மூன்று பேர் காயமடைந்தனர், அவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து காரணமாக விஸ்லன் சுரங்கப்பாதை பல மணி நேரம் முழுமையாக மூடப்பட்டது.
மூலம்- 20min