கிறீசின் விடுமுறை கால தீவான கிரீட்டின் கிழக்கே இன்று அதிகாலை 1 மணியளவில், பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் இது 6.1 ஆகவும், 78 கிலோமீட்டர் ஆழத்திலும் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஜெர்மன் புவி அறிவியல் நிறுவனம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகவும், 68 கிலோமீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் பதிவானதாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கிழக்கு கிரீட்டில் உள்ள சிறிய தீவான காசோஸுக்கு கிரீஸ் அரசாங்கம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலநடுக்கம் இப்பகுதியில் உள்ள பிற நாடுகளிலும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எகிப்து, சிரியா மற்றும் இஸ்ரேலில் கூட நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட சேதங்கள், பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
மூலம்- 20min