இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், அமைக்கப்பட்ட சில பதுங்கு குழிகளை மீண்டும் போருக்கு ஏற்றதாக மாற்றுவது குறித்து இராணுவத் தளபதி Thomas Süssli பரிசீலித்து வருகிறார்.
இரண்டாம் உலகப் போரின் போதும் அதற்குப் பின்னரும் சுவிட்சர்லாந்தைப் பாதுகாக்க நூற்றுக்கும் மேற்பட்ட இரகசிய பதுங்கு குழிகள் வடிவமைக்கப்பட்டன.
அவை, நாட்டின் எல்லைகள் மற்றும் போக்குவரத்து பாதைகளில் எதிரிகளின் முன்னேற்றங்களைத் தடுக்கும் நோக்கம் கொண்டவை.
2018 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் இந்தப் பதுங்குகுழிகளை அகற்ற முடிவு செய்தது.
சில பதுங்குகுழிகள் பின்னர் தனியார் அமைப்புகளுக்கு விற்கப்பட்டுள்ளன. உக்ரைனில் போர் வெடித்தவுடன், விற்பனை நிறுத்தப்பட்டது.
இப்போது, இராணுவத் தலைவர் Thomas Süssli இந்தப் பதுங்குகுழிகளை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
மூலம்- 20min