ஜெனீவாவின் பாக்விஸ் மாவட்டத்தில் நேற்றுப் பிற்பகல் ஆயுதம் ஏந்திய ஒருவரை பொலிசார் சுட்டுக் கொன்றனர்.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒரு நபர் நகர காவல்துறை வாகனத்தின் மீது நின்று கொண்டு ஒரு பெரிய கத்தியை காட்டி அச்சுறுத்திக் கொண்டிருந்தார்.
அவர் திடீரென தரையில் குதித்து ஓடியபோது, ஒரு அதிகாரி நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதில், அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டது.
உயிரிழந்தவரின் அடையாளம் தற்போது தெரியவில்லை.
மூலம்- 20min