Berikon இல் கடந்த ஞாயிற்றுக்கிழமை 15 வயதுச் சிறுமி ஒருவர், 14 வயதுடைய அவருடைய பாடசாலை தோழியினால் கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது.
சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கும் அந்தப் பிரதேசத்தில் உள்ள பெற்றோர் மற்றும் மாணவர்கள் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாதவர்களாக இருக்கின்றனர்.
குறித்த சிறுமி ஏன் தனது பாடசாலை தோழியை கொலை செய்தார் என்ற கேள்விக்கான பதில் இன்னமும் கிடைக்காத நிலையில் குழப்பம் நீடிக்கிறது.
இந்த நிலையில், குற்றம் நடந்து இரண்டு நாட்கள் ஆகியும், பல கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்கப்படவில்லை.
இருப்பினும், பொதுமக்களுக்கு அதிகாரிகளிடமிருந்து எந்தத் தகவலும் கிடைக்காது என்று ஆர்காவ் கன்டோனின், சட்டமா அதிபர் அலுவலகத்தின் பேச்சாளர் அட்ரியன் ஷூலர் தெரிவித்துள்ளார்.
சிறார் குற்றவியல் சட்டம், சிறார் குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் வழக்குகளை தெளிவாக ஒழுங்குபடுத்துகிறது.
சிறார் குற்றவியல் சட்டத்தின் கீழ் இது வழக்கு அல்ல. குற்றவாளி ஒரு மைனர் என்பதால், அவளுக்கு குறிப்பாக பாதுகாப்பு தேவை.
இதன் விளைவாக அதிகாரிகளின் தரப்பில் இரகசியத்தன்மையை பேணுவது முழுமையான கடமை.
விசாரணைகள் முடிவடைந்த பின்னர், ஏதேனும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் நேரத்தில், மேலும் தகவல்கள் வெளியிடப்படலாம், இதுவும் தற்போது உறுதியாகத் தெரியவில்லை. என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை சிறுமி கொல்லப்பட்ட இடத்திற்கு நேற்று முன்தினமும் நேற்றும் பெருமளவிலானோர், சென்று மலர்களையும், பொம்மைகளையும் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மூலம்- 20min