Zofingen இல் கார் மோதி பாதசாரி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
Migros அருகே பாதசாரிக் கடவையில் நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 68 வயதுடைய ஆண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய 52 வயதுடைய பெண் ஓட்டுநரின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மூலம்- 20min.