ரஷ்யாவுக்காக, வெளிநாட்டு நாசவேலைகளில், ஈடுபடவிருந்தனர் என்ற சந்தேகத்தில், ஜெர்மன் அதிகாரிகள் மூன்று உக்ரேனியர்களை கைது செய்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் New;W சுவிட்சர்லாந்தின், Thurgau. கன்டோனில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் அவர் கார்ல்ஸ்ரூஹேவில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் மூவரும் உக்ரைனிய குடிமக்கள் என்றும், ஜெர்மனியில் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும், வேலையின்றி இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள், மார்ச் 2025 இறுதிக்குள் ஜெர்மனியில் சரக்கு போக்குவரத்தில் தீ வைப்பு மற்றும் வெடிக்கும் தாக்குதல்களை நடத்த ஒப்புக்கொண்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo