ஜெனிவாவில் உள்ள Plainpalais இல் அடுக்குமாடிக் குடியிருப்பில் 65 வயதுடைய ஆண் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிசார், உயிரிழந்தவரின் 31 வயதுடைய மகனை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
இருவரே ஒரே குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர் என்றும் பொலிசார் கூறியுள்ளனர்.
மூலம்- 20min