Schaffhausen பாடசாலைக்கு குண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று நண்பகல் பாடசாலைக்கு தொலைபேசியில் குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து மாணவர்களும் ஆசிரியர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்ட பொலிசார் பாரிய தேடுதலை மேற்கொண்டனர்.
இந்த பொலிஸ் நடவடிக்கை பிற்பகல் 3.40 மணிவரை இடம்பெற்றது.
இதன்போது பொய்யான மிரட்டல் விடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
பொலிஸ் விசாரணைகளை அடுத்து, குண்டு அச்சுறுத்தல் விடுத்த நபரை பொலிசார் நேற்று மாலை கைது செய்தனர்.
மூலம்- 20min