Winterthur இல் பொலிஸ் நிலையம் அருகே மர்மப் பொருள் காணப்பட்டதை அடுத்து, பொலிஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நண்பகல் கார் ஒன்றின் கீழ் மர்ம பொருள் ஒன்று கிடப்பதை பெண் ஒருவர் அவதானித்துள்ளார்.
இதையடுத்து பொலிசார் அந்தப் பகுதி முழுவதையும் சுற்றி வளைத்த துடன், அருகில் இருந்தவர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர்.
பொலிசார் ரோபோவின் உதவியுடன், அந்தப் பொருளை கைப்பற்றி சோதனையிட்ட போது அதில் ஆபத்தான பொருட்கள் எவையும் இருக்கவில்லை.
இந்த நிலையில், இரவு 8 மணியளவில், மீண்டும் பொதுமக்கள் திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
மூலம்- 20min.

