பெர்ன் கன்டோனில், வேலையின்மை காப்புறுதி நிதியம் ஏப்ரல் மாத இறுதி முதல், ஓகஸ்ட் மாத இறுதி வரை -ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் தடைகள் மற்றும் வேலை தேடுபவர்கள் அதிகமாக இருப்பதால் ஏற்படும் அதிக பணிச்சுமையே இந்த மூடலுக்குக் காரணம் என்று அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனால், வேலையின்மை சலுகைகள் வழங்கும் செயற்பாடுகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், எஞ்சிய நாட்களில், அனைத்து சேவைகளும் வழக்கம் போல் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, பெர்ன் கன்டோனில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
2024 ஏப்ரலில், 15,572 பேர் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், ஒரு வருடம் கழித்து இந்த எண்ணிக்கை 18,689 ஆக உயர்ந்துள்ளது.
இந்த அதிகரிப்புதான் இந்த அமைப்பின் மீதான அழுத்தத்திற்கு முக்கிய காரணம் என்று பெர்ன் வேலையின்மை காப்புறுதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மூலம்- 20min.

