Simplon பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர், 3700 மீற்றர் உயரத்தில் பனிச்சரிவில் சிக்கினர்.
அவர்களில் ஒருவர் பனிச்சரிவில் புதையுண்ட நிலையில் மற்றவர் அவசர சேவைப் பிரிவினருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அவர் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.