பெர்னில் உள்ள Brünnengutஇல் பாடசாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பகல் பராமரிப்பு நிலையமும், கட்டடமும் சேதம் அடைந்துள்ளன.
நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீயணைப்பு பிரிவினர் உடனடியாக விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்திய போதும், பகல் பராமரிப்பு நிலையமும், தங்குமிடமும் பயன்படுத்த முடியாதளவுக்கு சேதம் அடைந்துள்ளன.
இதில் நாசவேலைகள் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.

