Berikon இல் காட்டுக்குள் கொலை செய்யப்பட்ட 15 வயதுச் சிறுமி கொலை தொடர்பாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்காவ் கன்டோனில் நேற்று 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்டமை தொடர்பாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறியிருந்தனர்.
இந்த நிலையில், அந்தச் சிறுமியை கொலை செய்தவர்,14 வயது சிறுமி என சந்தேகிக்கப்படுகிறது.
உயிரிழந்த சிறுமியை 14 வயது சிறுமி வெட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றத்திற்கான சரியான சூழ்நிலைகள் மற்றும் சாத்தியமான நோக்கங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும், பொலிசார் கூறியுள்ளனர்.
நேற்று மாலை 4 மணியளவில், ஷூட்சென்ஹாஸ் அருகே, நடந்து சென்றவர்கள் முதலில் 14 வயது சிறுமியைக் கண்டனர்.
சிறுமி காயத்துடன் இரத்தம் தோய்ந்த நிலையில் உதவி கேட்டுக்கொண்டிருந்தார்.
சிறிது நேரத்திற்குப் பின்னர், அருகிலுள்ள காட்டில் 15 வயது சிறுமி தரையில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை மலையேறுபவர்கள் கண்டுபிடித்திருந்தனர்.
14 வயதுச் சிறுமியை அவரை வெட்டியிருப்பதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த சிறுமி காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு சிறுமிகளும் Mutschellen மாவட்ட பாடசாலையில் கல்வி கற்று வருபவர்கள் என்றும் இரண்டு பேருக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.

