Schaffhausen இல் உள்ள Gräfler பாடசாலைக்கு தொலைபேசியில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை அடுத்து, பொலிசார் அதனை சுற்றிவளைத்துள்ளனர்.
இன்று பிற்பகல் விடுக்கப்பட்ட இந்த அச்சுறுத்தலை அடுத்து மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அந்தப் பகுதியை சுற்றிவளைத்துள்ள பொலிசார், எவரையும் உட்செல்ல முடியாமல் தடை செய்துள்ளனர்.
கனரக உபகரணங்களுடன் பொலிசார் அங்கு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், அம்புலன்ஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

