சுவிஸ் வெளிநாட்டு சபைக்கு முதன்முறையாக, வெளிநாடுகளில் உள்ள சுவிஸ் குடிமக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
சுமார் 50 நாடுகளில் உள்ள சுவிஸ் குடிமக்கள் 2025-2029 சுவிஸ் வெளிநாட்டு சபையின் பிரதிநிதிகளை தேர்வு செய்ய இணையவழியில் வாக்களித்துள்ளனர்.
பெர்ன் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட மின்னணு நேரடி வாக்களிப்புக்கான யுனிவோட் கருவி, சில தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
உதாரணமாக, அவுஸ்ரேலியாவில், மின்னணு நேரடித் தேர்தல்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர், வெளிநாடுகளில் வசிக்கும் சுவிஸ் மக்களில் சுமார் 0.1 சதவீதம் பேர் மட்டுமே சுவிஸ் வெளிநாட்டு சபைக்கு (CSA) தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தனர்.
இப்போது, வாக்காளர் எண்ணிக்கை 5.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வெளிநாடுகளில் மொத்தம் 13,500 சுவிஸ் குடிமக்கள் இணையவழி நேரடித் தேர்தல்களில் பங்கேற்றனர்.
OSA இப்போது இணையவழி நேரடி வாக்களிப்பு முறையை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஐந்தாவது நாடாளுமன்றம் என்றும் CSA அழைக்கப்படுகிறது.
இது வெளிநாடுகளில் உள்ள சுவிஸ் நாட்டவர்களின் மிக உயர்ந்த அமைப்பாகும்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இது தேர்ந்தெடுக்கப்படுகிறது.
சவெளிநாடுகள் உலகளவில் 55 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில், 13 தொகுதிகளில், 50 நாடுகள் இந்த ஆண்டு மின்னணு நேரடித் தேர்தல்களை நடத்தின.
இந்த 13 தொகுதிகளில் சுமார் 243,000 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
மின்னணு வாக்களிப்பு மே 11 வரை நீடித்தது. தேர்தல் முடிவுகள் ஓகஸ்ட் மாதத்தில் உறுதிப்படுத்தப்படும் என்று OSA தெரிவித்துள்ளது.
அதற்குள், சுவிஸ் சங்கங்களால் பாரம்பரிய முறையில் தேர்ந்தெடுக்கப்படும் எஞ்சியுள்ள பிரதிநிதிகளும் தீர்மானிக்கப்படுவார்கள்.
மூலம்-bluewin