ஜெனீவா பல்கலைக்கழகத்தில் உள்ள ரெக்டர் அலுவலகத்தின் முன் முகாமிட்டிருந்த பலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் வியாழக்கிழமை மாலை வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
எனினும். அத்துமீறி நுழைந்ததற்காக அவர்கள் மீது குற்றவியல் புகார் பதிவு செய்யப்பட்டது.
புதன்கிழமை முதல் பல்கலைக்கழகத்தில் முகாமிட்டிருந்த பலஸ்தீன ஆதரவு மாணவர்கள், அகற்றுவதற்கு தயாராக இருந்த பொலிசாருடனான மோதலைத் தவிர்க்க நேற்றுமாலை அங்கிருந்த வெளியேறினர்.
அவர்கள் வெளியேறும்போது, பல்கலைக்கழக கட்டடத்திற்கு வெளியே “இஸ்ரேல் கொலைகள், UNIGE உடந்தை” என்று கோஷமிட்டனர்.
கடந்த வாரம் ஏற்கனவே UniMail மண்டபத்தை ஆக்கிரமித்திருந்த பலஸ்தீனத்திற்கான மாணவர் ஒருங்கிணைப்பு (CEP) குழு, சிறிது நேரத்தில் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வந்தது.
பலஸ்தீனத்தில் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய நிறுவனங்களுடனான அனைத்து ஒத்துழைப்பையும் UNIGE உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மூலம்- swissinfo