ஓல்டன் நிலையத்தில் இன்று காலை ரயில் போக்குவரத்து தடைப்பட்டது.
ரயில்வே சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டது.
இந்த கட்டுப்பாடு காலை 8:00 மணி வரை நீடித்தது என்று SBB அறிவித்துள்ளது.
காலை 8 மணிக்குப் பிறகு, ரயில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.
இதனால் IC5, IC21, IR26, IR27, IR35, RE12, S3, S23, S26, மற்றும் S29 உட்பட பல வழித்தடங்களில் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.
தாமதங்கள், ரத்துச் செய்தல்கள் மற்றும் மாற்றுப்பாதைகள் எதிர்பார்க்கப்பட்டன.
டல்லிகென் நிலையத்திற்கும் ஓல்டன் நிலையத்திற்கும் இடையிலான பயணிகள் மாற்று பேருந்துகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.
மூலம்- 20min