Steinerberg இல் நேற்று பிற்பகல் மின்னல் தாக்கியதில் வீட்டுக் கூரையில் தீ விபத்து ஏற்பட்டது.
எனினும் இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
நேற்று பிற்பகல் 3:30 மணியளவில், மின்னல் தாக்கியதை அடுத்து, வீட்டின் கூரையிலிருந்து புகை வெளியேறுவதாக ஸ்விஸ் கன்டோனல் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக அனுப்பப்பட்ட தீயணைப்புத் துறையினர், தீயை விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து ஏற்பட்டபோது கட்டடத்தில் யாரும் இருக்கவில்லை.
மின்னல் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்- polizei-schweiz.ch