St. Gallen மற்றும் Goldach இடையிலான ரயில் போக்குவரத்து நேற்றும் தடைப்பட்டிருந்தது.
ரயில் இயந்திரமும், ரயில் பாரம் தூக்கி இயந்திரமும் மோதிய விபத்தை அடுத்து நேற்று முன்தினம் இரவு 11.30 மணியில் இருந்து, இந்த பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்துக்குள்ளான இயந்திரங்களை அகற்றி ரயில் பாதையை சீரமைக்க வேண்டியிருப்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மெதுவாகவே பணிகள் இடம்பெறுகின்றன. இதனால் நேற்று மாலைவரை இந்தப் பாதை வழியாக போக்குவரத்து சீரடையவில்லை.
முதலில் ஒரு வழிப்பாதையை மட்டும் சீரமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.