22.8 C
New York
Tuesday, September 9, 2025

10 பில்லியன் அமெரிக்க டொலரை நாட்டுக்கு அனுப்பிய இலங்கையர்கள்

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 1.53 பில்லியன் டொலர்கள் அந்நிய செலவாணியாக இலங்கைக்கு கிடைத்துள்ளது.

இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 8.7 வீத அதிகரிப்பு எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் , வெளிநாட்டுப் பணியாளர்கள் 10.26 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வங்கி முறையின் ஊடாக சட்டரீதியாக கொண்டு வருவதற்கு பல சலுகைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

வங்கி முறை மூலம் சட்டப்பூர்வமாக பணம் அனுப்பும் தொழிலாளர்களுக்கு மின்சார வாகன இறக்குமதி உரிமம் வழங்குதல், மனுசவி ஓய்வூதியத் திட்டம், பல்நோக்குக் கடன் திட்டம் அறிமுகம், தொழிலாளர்களுக்காக விமான நிலையத்தில் ஹோப் கேட் என்ற சிறப்பு பிரிவு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Related Articles

Latest Articles