-0.1 C
New York
Sunday, December 28, 2025

சூரிச் அடுக்குமாடி குடியிருப்பில் இளைஞன் கொலை.

சூரிச் ஜூர்கெர்ஸ்ட்ராஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை இரவு 10 மணிக்குப் பின்னர்  பெண் ஒருவர் அழைப்பு எடுத்து, ஒரு வீட்டில்  உரத்த வாக்குவாதம் நடந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற சூரிச் பொலிசார், பலத்த காயமடைந்த ஒருவரை கண்டுபிடித்தனர்.

அவசர மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் அவரைக் காப்பாற்ற  முயற்சிகள்  மேற்கொண்ட போதிலும், 18 வயதான எரித்ரியர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளது.

தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

குற்றத்தின் சரியான சூழ்நிலைகள் மற்றும் பின்னணி தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.

Related Articles

Latest Articles