Bahnhofstrasse 31இல் உள்ள நகைக் கடை ஒன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை 5.30 மணியளவில் இந்தச் கொள்ளைச் சம்பவம் குறித்து சூரிச் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
நகைக் கடையின் வாயிலை வாகனம் ஒன்றினால் மோதி உடைத்து விட்டு, அங்கிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கொள்ளையிடப்பட்ட நகைகள் மற்றும் பொருட்களின் மதிப்பு இன்னமும் கணக்கிடப்படவில்லை.
கொள்ளையர்கள் தப்பிச் சென்று விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மூலம்- 20min