27.9 C
New York
Thursday, July 2, 2026

மீண்டும் முழு அளவில் செயற்படும் இஸ்ரேலில் உள்ள சுவிஸ் தூதரகம்.

இஸ்ரேலில் சுவிஸ் தூதரகம் மீண்டும் முழு அளவில் இயங்கத் தொடங்கியுள்ளது.

டெல் அவிவில் தமது ஊழியர்கள் மீண்டும் பணியைத் தொடங்கியுள்ளதாக சுவிஸ்  தூதுவர் சைமன் கீஸ்புஹ்லர் X  தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாக தூதரகம் முழுநேரமும் செயற்பட்ட போதும், தற்போது அனைத்து தூதரக சேவைகள் மற்றும் வருகைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என்று தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 12 நாட்களாக ,தமது  குழு சுவிட்சர்லாந்து மற்றும் அதன் குடிமக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கடினமான சூழ்நிலைகளில் 24 மணி நேரமும் உழைத்து வருகிறது என்று கீஸ்புஹ்லர் மற்றொரு பதிவில் எழுதியுள்ளார்.

இதற்கிடையில், தெஹ்ரானில் உள்ள சுவிஸ் தூதரகம் மூடப்பட்டே உள்ளது.

நிலைமை எப்படி மாறும் என்பதை இன்னும் சொல்ல முடியாது என்று சுவிஸ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈரானுக்கான தூதுவர் நாடின் ஒலிவேரி லோசானோ தலைமையிலான குழு தற்போது சுவிஸ் தலைநகர் பெர்னில் இருந்து நடவடிக்கைகளை பராமரித்து வருகிறது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles