17 வயது அல்ஜீரிய இளைஞன் ஒருவர் ஹீர்ப்ரக் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை இறந்து கிடந்தார்.
இரத்த வெள்ளத்தில் நடைமேடையில் கிடந்த அந்த இளைஞனைக் கண்டவர்கள் அதிகாலை 3:45 மணியளவில் அவசர அழைப்பு மையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பலத்த வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாக சென் காலன் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இறந்தவர் ஆல்ட்ஸ்டாட்டனில் உள்ள கூட்டாட்சி புகலிட மையத்தில் வசித்து வந்தார்.
குற்றம் நடந்த இடம் சுற்றி வளைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்ட போதும், ரயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.
மூலம்-20min