2.3 C
New York
Sunday, March 29, 2026

ஒரே நேரத்தில் பலஸ்தீன, இஸ்ரேல் ஆதரவு பேரணிகள்- லொசானில் பதற்றம்.

லொசானில் நேற்று மாலை ஒரே நேரத்தில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் இடம்பெற்ற இரண்டு பேரணிகளைக் கட்டுப்படுத்த பொலிசார், நீர்ப்பீரங்கிகளையும், கண்ணீர் புகைக்குண்டுகளையும், பயன்படுத்தினர்.

“இஸ்ரேலுக்கு ஆதரவான- யூத எதிர்ப்புக்கு எதிரான மௌன நடைபயணம்” முதலில் பிளேஸ் சென்-லோரன்ட்டில் நடைபெற திட்டமிடப்பட்டது.

அதே நேரத்தில் பலஸ்தீன ஆதரவு பேரணி பிளேஸ் டி லா ரிப்போனில் திட்டமிடப்பட்டது. இவற்றக்கிடையில் 100 மீட்டருக்கும் குறைவான இடைவெளியே இருந்தது.

இஸ்ரேலுக்கு ஆதரவான பேரணியில்  சுமார் 100 பேர் பங்கேற்றனர்.

பலஸ்தீன ஆதரவு பேரணியில் சுமார் 1,000 பேர் பங்கேற்றனர்.

பெரும்பாலான ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் போராட்டங்களை அமைதியாக வெளிப்படுத்தினர். இருப்பினும், முகமூடி அணிந்த சுமார் 30 பேர் நகர மையத்தில் பொலிசார் மீது பொருட்களை வீசி அமைதியின்மையை ஏற்படுத்தினர்.

இதையடுத்து பெப்பர் ஸ்பிரே, ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப்புகை குண்டுகள் மற்றும் நீர் பீரங்கிகளைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்ததாகக் கூறப்படுகிறத.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அல்லது பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் நகர மையத்தில் மாலை 6 முதல் 8 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இரு குழுக்களுக்கும் இடையே இடைவெளியை உருவாக்க இஸ்ரேல் ஆதரவு பேரணி சிறிது நேரம் லொசான்-ஓச்சிக்கு மாற்றப்பட்டது.

ஓச்சியில் இஸ்ரேல் ஆதரவு பேரணி பெரும்பாலும் அமைதியாக இடம்பெற்ற போதும், பேரணியை நெருங்க முயன்ற பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிசார் தடுத்து நிறுத்த வேண்டியிருந்தது.

இதற்கிடையில், இஸ்ரேல் ஆதரவு பேரணி கலைந்து சென்றதால் குழப்பம் ஏற்படவில்லை.

மூலம்- 20min

Related Articles

Latest Articles