20.5 C
New York
Wednesday, May 13, 2026

சூரிச்சில் கோர விபத்து- 2 பாதசாரிகள் பலி, 3 பேர் படுகாயம்.

சூரிச்சில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு 8 மணியளவில், கிளாட்ப்ரக்  இல் பாதசாரிகள் குழு மீது, கார் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தில், 29 வயது ஆண் மற்றும் 70 வயது பெண் என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காரை ஓட்டிச் சென்ற 19 வயதுடைய ஓட்டுநர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடைபாதையில் இருந்த ஐந்து பேர் கொண்ட குழு மீதே கார் மோதியுள்ளது. அவர்களில் இருவர் பல மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டனர்.

அதிவேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles