4.8 C
New York
Sunday, March 29, 2026

பலஸ்தீனத்தை அங்கீகரிக்க கோரும் மனு சுவிஸ் அரசாங்கத்திடம் கையளிப்பு.

சுவிட்சர்லாந்தும் பலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரும் மனு பெர்னில் உள்ள அரசாங்கத்திடமும் நாடாளுமன்றத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சூரிச் எழுத்தாளர் தோமஸ் மேயர் ஆரம்பித்து வைத்த இந்த மனுவில் 13,750 கையொப்பங்கள் திரட்டப்பட்டு நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

ஒரு வருடத்திற்கு முன்னர், அவர் மனுவைத் தொடங்கிய போது, சில நூறு கையொப்பங்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக எண்ணற்ற மரணங்கள் ஏற்பட்ட பின்னர் இரண்டாவது முயற்சி பலனளித்துள்ளதாக என்று அவர் குறிப்பிட்டார்.

“நாங்கள் யூதர்கள் எங்கள் சொந்த அரசுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது, மேலும் நிறைய இரத்தம் சிந்த வேண்டியிருந்தது.

அதே காரணங்களுக்காக, பலஸ்தீனர்கள் தங்கள் சொந்த அரசைப் பெறுவதற்கான நேரம் இது” என்று யூத எழுத்தாளர் ஒரு தெரிவித்துள்ளார்.

இரு அரசு தீர்வு மூலம் மட்டுமே பிராந்தியம் அமைதியைக் காண முடியும், சுவிட்சர்லாந்தை அதன் மனிதாபிமான பாரம்பரியத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளவும், பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கவும் இந்த மனு வலியுறுத்துகிறது.

மூலம்-swissinfo

Related Articles

Latest Articles