சூரிச்சின் டயட்டிகானில் நேற்றுமுன்தினம் ஒரு நடவடிக்கையின் போது, சூரிச் கன்டோனல் பொலிசைச் சேர்ந்த ஒரு பொலிஸ் சுழியோடி உயிரிழந்துள்ளார்.
விபத்து நடந்தபோது பொலிசார் தண்ணீரில் ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தனர்.
மாலை 5 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீரில் மூழ்கி உயிரிழந்த சுழியோடியை சக சுழியோடிகள் அரை மணி நேரம் கழித்து, மீட்டனர்.
உயிரிழந்தவர் 44 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.

