மும்ப்ஃப் நகரில் சனிக்கிழமை மாலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட ஒரு விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்.
இரவு 8:50 மணியளவில் மும்ப்ஃப் மற்றும் ஸ்டீன் இடையேயான பாஸ்லர்ஸ்ட்ராஸில் இந்த விபத்து நிகழ்ந்தது.
விபத்துக்கான காரணங்கள் இன்னும் தெரியவரவில்லை, இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாகவும், மோதலின் விளைவாக ஒரு கார் குப்புறக் கவிழ்ந்து கிடந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
விபத்தில் ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் காயங்களின் தீவிரம் குறித்து பொலிசார் கூடுதல் விவரங்களை வழங்கவில்லை.
மூலம்- swissinfo

